எஸ்.வி.சேகரை உடனே கைது செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
எஸ்.வி.சேகரை உடனே கைது செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரை ஒரு மாதத்திற்கும் மேலாக போலீசார் கைது செய்யாமலும், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலும் இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எஸ்.வி.சேகரின் உறவினரான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
தற்போது, எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு ரத்து செய்த பின்னணியில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவரை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story