‘அந்த்யோதயா’ ரெயிலை உடனே இயக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் தாம்பரம் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ‘அந்த்யோதயா’ எக்ஸ் பிரஸ் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தாம்பரம் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ‘அந்த்யோதயா’ எக்ஸ் பிரஸ் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 27-ந் தேதியே இயக்கப்படுவதாக அறிவித்துவிட்டு இன்னும் இயக்கப்படாமல் இருப்பது நியாயமில்லை. அதுவும் இப்போது கோடை விடுமுறைக் காலத்தில், ரெயிலில் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற வேளையில், ‘அந்த்யோதயா’ ரெயிலை இயக்க ஆரம்பிக்காமல் அப்படியே வைத்திருப்பது ஏற்புடையதல்ல.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களின் போக்குவரத்துக்கு பயனளிக்கும் வகையில் ‘அந்த்யோதயா’ ரெயிலை உடனடியாக இயக்கவும், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அறிவித்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் மத்திய பா.ஜ.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story