தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் பொன்.ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 13 May 2018 2:08 AM IST (Updated: 13 May 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி ஏற்படும்போது தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்க முடியும் என நம்புவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆலந்தூர், 

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி ஏற்படும்போது தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்க முடியும் என நம்புவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக மாநில தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று உறுதியாக ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு பாரதீய ஜனதா கட்சி ஆட்சி ஏற்படும்போது, தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இரு மாநிலங்களுக்கும் இடையே நல்ல உறவு ஏற்படும் வகையில் பா.ஜனதா அரசு உறுதியாக செயல்படும். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுடனும் சுமுகமான உறவு ஏற்படும்.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து ஒரு மாத காலத்துக்கு பிறகு அந்த மாநில முதல்-மந்திரியை சந்தித்து தமிழக நிலவரங்களை பற்றியும், காவிரி தொடர்பாகவும் விரிவாக பேசுவேன்.

ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக்கூடாது என்று கவர்னரிடம் எந்த அடிப்படையில் மனு கொடுத்தனர் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒருவரின் நினைவிடம் அமைப்பதில் எந்த தடங்கலும் இருக்கக்கூடாது. ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருந்து செயல்பட்டவர்.

குழந்தைகள் கடத்தல் என்று கூறி அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆகிவிடும் சூழ்நிலை உருவாகிவிடும்.

கடுமையான நடவடிக்கை எடுப்பதில் தயங்க வேண்டிய அவசியமில்லை. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலையை எடுத்து சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது தமிழக அரசுக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story