அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல் இது - கமல்ஹாசன் பேட்டி


அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல் இது - கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2018 8:53 PM IST (Updated: 14 May 2018 8:53 PM IST)
t-max-icont-min-icon

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சமயம் இது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். #KamalHaasan #Cauvery

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் முதலில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னா் கமல்ஹாசன் நிருபா்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் அவா் கூறுகையில்,

காவிரி விவகாரம் தொடர்பாக மே 19இல் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தாக கூறினார். மேலும் விஜயகாந்த், தமிழிசை, தினகரன், வேல்முருகன், பாலகிருஷ்ணன், நாசர், விஷால்  ஆகியோருக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

“தமிழக மக்களின் நலன் என்ற ஒரு கொள்கையின் கீழ் பல கட்சித் தலைவர்கள் இணையவேண்டும்” என்றும், 'காவிரிக்கான தமிழகத்தின் குரல்' என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயரையும் அறிவித்தார். அனைத்துக்கட்சி தலைவா்களும் சோ்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல் அமைந்துள்ளது. 


இந்நிலையில் காவிரிக்கான ஆலோசனை கூட்டத்திற்கு ஆளுங்கட்சியை அழைப்பதற்கான முயற்சியை எடுத்துவருவதாகவும்,பின்னா் இந்த விவகாரம் தொடா்பாக ரஜினியையும் அழைக்க இருக்கிறேன் என்று அறிவித்தார். கடைசியில் “அழைத்தால் வருவார்கள் என்று  நினைத்தேன், அதனால் தான் அழைத்தேன் கண்டிப்பாக அனைவரும் வருவார்கள் என எண்ணுகிறேன்”. இவ்வாறு அவா் கூறினார்.

Next Story