மாநில செய்திகள்

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் + "||" + Tamil Writer Balakumaran Passed away

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் இன்று மருத்துவமனையில் காலமானார்.
சென்னை

பிரபல தமிழ் எழுத்தாளர் உடல் நலக்குறைவால்  காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி  பாலகுமாரன் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
 
100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகள் எழுதியுள்ளார். நாயகன், குணா, ஜெண்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

கலைமாமணி விருது பெற்றுள்ள பாலகுமாரன், இலக்கிய சிந்தனை விருதும் பெற்றுள்ளார்.