பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு


பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு
x
தினத்தந்தி 16 May 2018 10:24 AM IST (Updated: 16 May 2018 10:24 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. #PlusTwoResults

சென்னை

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதன் விவரங்கள் வருமாறு:-

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் ஒரு சதவிதம் குறைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல்-95%, உயிரியல்-96.3%, கணிதம்-96.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல்-93.9%, விலங்கியல்-91.9%, கணினி அறிவியல்-96.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல்-90.3%, கணக்குப்பதிவியல்-91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்

1,07,266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்

1,65,425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்

1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 231

1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 4847

1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 8510

1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 11739

1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 71,368

901 முதல்  1000 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,07,266

801 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,43,110

701 முதல் 800 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,65,425

700-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 3,47,938

Next Story