பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் மற்றும் பாம்பை கொண்டு வந்த பாம்பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்
கடலூரில் ஒருவரது சதாபிகேஷம் விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்தால் விசேஷமாக இருக்கும் என்று சிலர் ஆலோசனை கூறியதை அடுத்து பாம்பாட்டி மூலம் பாம்பை கொண்டு வந்து புரோகிதர் பூஜை செய்தார். இந்த பூஜையை அதில் கலந்து கொண்ட ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகள் பூஜையில் ஈடுபட்ட புரோகிதர் மற்றும் பாம்பாட்டி ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story