கமலும், ரஜினியும் என் நண்பர்கள் அல்ல: விஜயகாந்த் மட்டும்தான் என் நண்பர் சரத்குமார் பேட்டி
கமலும், ரஜினியும் என் நண்பர்கள் அல்ல, விஜயகாந்த் மட்டும்தான் என் நண்பர் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். #SarathKumar
சென்னை,
ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:-
அரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவியவர். கமலும், ரஜினியும் என் நண்பர்கள் அல்ல, கலைத்துறையில் பயணிப்பவர்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story