மாநில செய்திகள்

புதுமுக நடிகைக்கு கொலை மிரட்டல் + "||" + Newcomer to actress Threatened to kill

புதுமுக நடிகைக்கு கொலை மிரட்டல்

புதுமுக நடிகைக்கு கொலை மிரட்டல்
சென்னை வடபழனி திருநகரை சேர்ந்தவர் தன்யா என்கிற ரவீயா பானு(வயது 26). புதுமுக சினிமா நடிகையான இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
சென்னை,

நான் இயக்குனர் கணேசன் இயக்கிய 18.5.2009 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இலங்கையில் இசைபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இந்தநிலையில் என்னிடம் செல்போனில் பேசிய நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்தார். 18.5.2009 படத்தில் நிர்வாணமாக, கேவலமாக நடித்து உள்ளாய். உன்னை தொலைத்து விடுவேன் என்று பயமுறுத்தினார்.


நானும், எனது தாயாரும் தனியாக வசிக்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த ‘சைபர் க்ரைம்’ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயியிடம் ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் 8 பேர் கைது; கார் பறிமுதல்
‘சஞ்சீவி வேர்’ தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
2. மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்
மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு, ரவுடி புல்லட் நாகராஜ் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
3. காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை காவல்துறையிடம் ஒப்படைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.!
காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை பா.ஜனதா எம்.எல்.ஏ. காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
4. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி
“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” என கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு கலப்பு திருமண தம்பதி கேள்வியை எழுப்பியுள்ளனர்.
5. நடிகர் யஷ்சை கொல்ல பிரபல ரவுடி திட்டமிட்டாரா?
நடிகர் யஷ்சை கொல்ல பிரபல ரவுடி திட்டமிட்டாரா? என்பது குறித்து குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சதீஸ்குமார் பதிலளித்துள்ளார்.