தங்கம் விலை ‘திடீர்’ சரிவு 5 நாட்களில் பவுனுக்கு ரூ.520 குறைந்தது


தங்கம் விலை ‘திடீர்’ சரிவு 5 நாட்களில் பவுனுக்கு ரூ.520 குறைந்தது
x
தினத்தந்தி 18 May 2018 4:32 AM IST (Updated: 18 May 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலையில் ‘திடீர்’ சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 5 நாட்களில் பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த 13-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 15-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலையில் படிப்படியாக சரிவு காணப்படுகிறது.

14-ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 8, பவுன் ரூ.24 ஆயிரத்து 64-க்கும், 15-ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரம், பவுன் ரூ.24 ஆயிரத்துக்கும், 16-ந்தேதி ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 967, பவுன் ரூ.23 ஆயிரத்து 736-க்கும், நேற்று ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 950, பவுன் ரூ.23 ஆயிரத்து 600-க்கும் என தங்கம் விலை குறைந்துள்ளது.

கடந்த 5 நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை ‘திடீர்’ சரிவுக்கான காரணம் குறித்து, சென்னை தங்க-வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேட்டதற்கு, ‘உலக அளவில் தங்க சந்தையில் வீழ்ச்சி காணப்படுவதால், உள்ளூர் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இது போன்ற காரணங்களால் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டுள்ளது. நாளையும் (இன்று) தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் தங்கம் விலை சீராகும்’ என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.43-க்கும், கிலோ ரூ.43 ஆயிரத்துக்கும் விற்பனையான வெள்ளி நேற்று கிராமுக்கு 2 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் விலை அதிகரித்து ஒரு கிராம் 43 ரூபாய் 2 காசுக்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story