பல இடங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இல்லாதபோது புல்லட் ரெயில் திட்டம் தேவையா?
பல இடங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இல்லாதபோது புல்லட் ரெயில் திட்டம் தேவையா? ஹலோ எப்.எம்.மில், எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை,
ஹலோ எப்.எம்.106.4-ல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் தென்னக ரெயில்வேயின் மஸ்தூர் தொழிற்சங்கத்தின் (எஸ்.ஆர்.எம்.யூ.) பொதுச்செயலாளர் கண்ணையாவின் பேட்டி ஒலிபரப்பாகிறது. தொழிலாளர்களுக்கு தான் போராடி பெற்று தந்த பயன்களால், தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ரெயில்வே துறையின் பள்ளிகள், மருத்துவமனைகள் மூடப்படும் என வெளியாகும் செய்திகள் குறித்து பதிலளித்த அவர் போக்குவரத்து மற்றும் பயணிகள் தொடர்பான சேவைகள் தவிர மற்ற சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது என்றார்.
கீழ் நிலையில் உள்ள தொழிலாளர்களால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்க வைக்க முடியுமா? பெரிய மருத்துவமனைகளில் அவர்களால் வைத்தியம் பெற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர் இதுபற்றி ரெயில்வே நிர்வாகத்திடம் எடுத்துக்கூறி அவை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
ரெயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சி தொல்லை, கழிவறை நீரில் தேநீர் தயாரிக்கும் கொடுமைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கேட்டபோது பா.ஜனதா அரசு ரெயில்வேயை தனியாருக்கு தாரைவார்க்க துடிப்பதன் விளைவுதான் இது என தெரிவித்தார்.

பல இடங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இல்லாத நிலையில் புல்லட் ரெயில் திட்டம் தேவையா? என்று குற்றம்சாட்டிய கண்ணையா அதிக கட்டணத்துடன் இயக்கப்படும் சுவிதா ரெயில்கள், தமிழர்களுக்கு கிடைக்காமல் போகும் ரெயில்வே பணி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தொகுப்பாளர் ராஜசேகரிடம் பகிர்ந்து உள்ளார்.
Related Tags :
Next Story