தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்


தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்
x
தினத்தந்தி 20 May 2018 3:45 AM IST (Updated: 20 May 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வடகோட்ட தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் க.குரு நாதன் கூறியுள்ளார்.

சென்னை,

பூங்காநகர் தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு, அரும்பாக்கம், அயனாவரம், சென்னை மருத்துவ கல்லூரி வளாகம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் சாலை, பூக்கடை சாலை, புனித ஜார்ஜ் தபால் அலுவலகம், ஸ்டான்லி மருத்துவமனை, ஐகோர்ட்டு, ஐ.சி.எப்., பெரியார் நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, மண்ணடி, மின்சார வாரியத்தில் உள்ள தபால் அலுவலகம், மிண்ட் பில்டிங், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர், ரிப்பன் பில்டிங், ராயபுரம், செம்பியம், ஷெனாய்நகர், சவுகார்பேட்டை, வெங்கடேசபுரம், வேப்பேரி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் இந்த சேவைகள் அளிக்கப்படுகிறது.

இதில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது என்று கூறியுள்ள க.குருநாதன், ஏற்கனவே உள்ள ஆதார் விவரங்களை ரூ.30 செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

Next Story