மருத்துவ பட்டமேற்படிப்பு பொது கலந்தாய்வு தொடங்கியது கலந்துகொள்ள முடியாதவர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினார்கள். அதன்பிறகு முடிவு வெளியிடப்பட்டது. அவர்கள் பொது மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ தேர்வு குழுவுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று மதிப்பெண் அடிப்படையில் சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் எந்த இடங்களையும் தேர்வு செய்யக்கூடாது. அசல் மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
நேற்று கலந்தாய்வு நடந்து கொண்டிருந்தபோது சில மாணவர்களுக்கு எந்த இடங்களும் ஒதுக்க முடியாது என்று மருத்துவ தேர்வுக்குழு அறிவித்தது. அதனால் அந்த மாணவர்கள் கலந்தாய்வு நடந்த வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரும் அசல் சான்றிதழ் இல்லாதவர்கள். இவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங் களை தேர்வு செய்திருப்பவர் கள். சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி அவர்களை கலந்தாய்வுக்கு அனுமதித்தோம்.
ஆனால் அவர்களிடம் அசல் சான்றிதழ்கள் இல்லாததால் அவர்களுக்கு எந்த இடங்களையும் ஒதுக்க முடியவில்லை. எனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை எடுத்தவர்களும், அசல் சான்றிதழ்கள் இல்லாதோரும் கலந்தாய்வுக்கு வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று 569 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 69 பேர் வரவில்லை. வந்திருந்த 500 பேரில், 443 பேர் இடங்களை தேர்வு செய்தனர். 57 பேர் காத்திருப்போர் பட்டியலில் (அவர் கள் எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை) உள்ளனர். கலந்தாய்வு இன்றும் (திங்கட்கிழமை) நடக்கிறது.

Related Tags :
Next Story