தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை-சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #NipahVirus
சென்னை
போக்குவரத்து கழகங்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். மேலும் முதல்வரிடம் நிதி பெற்று போக்குவரத்துத் துறை மேம்படுத்தப்பட்டு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழம் தின்னும் வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, மருத்துவமனையை அணுகவும். என கூறினார்.
Related Tags :
Next Story