காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசும், கர்நாடக அரசும் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம்தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண முடியும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். குமாரசாமியின் இந்த யோசனை மிகவும் ஆபத்தானது. காவிரியில் தமிழகத்திற்கு உள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.
காவிரி சிக்கல் எந்த இடத்தில் தொடங்கியதோ அந்த இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி சிக்கலை பேசித்தீர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப்பிரச்சினையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர். இந்த யோசனைகள் காவிரிப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கி விடும்.
எனவே, காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது. மாறாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்கவைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story