வேலூர் மத்திய ஜெயிலில் வார்டனை அடித்து உதைத்த பெண் ஆயுள் தண்டனை கைதி

வேலூர் மத்திய ஜெயிலில் வார்டனை அடித்து உதைத்த பெண் ஆயுள் தண்டனை கைதி
x
தினத்தந்தி 22 May 2018 3:24 AM IST (Updated: 22 May 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வித்யா (வயது 34). கடந்த 2016-ல் ஓசூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் வேலூர் பெண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

வேலூர், 

இந்த நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் நேற்று முன்தினம் கைதிகளுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது வித்யா மருத்துவ பரிசோதனைக்கு வர மறுத்துள்ளார்.

இதையடுத்து ஜெயில் வார்டன் சுதா, வித்யா தங்கியிருந்த அறைக்கு சென்று இதுபற்றி கேட்டபோது வித்யா தகாத வார்த்தைகளால் அவரை திட்டி உள்ளார். தொடர்ந்து வார்டன் விடாமல் மருத்துவ பரிசோதனைக்கு வரும்படி வித்யாவை கட்டாயப்படுத்தி கையை பிடித்து இழுத்து வர முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வித்யா வார்டன் சுதாவை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் படுகாயம் அடைந்த வார்டன் சுதா சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து துணை சிறை அலுவலர் ஷாலினி கொடுத்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் கைதி வித்யா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story