தூத்துக்குடி கலவர துப்பாக்கிச் சூட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி உள்பட 9 பேர் பலி
தூத்துக்குடி கலவர துப்பாக்கிச் சூட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். #SterliteProtest
சென்னை
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டகாரர்கள் இன்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து சூறையாடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன்(55), தாமோதர் நகர் பகுதியில் வசிக்கும் மணிராஜ், குறுக்குசாலையை சேர்ந்த தமிழரசன்(28), ஆசிரியர் காலணியை சேர்ந்த சண்முகம்(40), மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன்(40), தூத்துக்குடியை சேர்ந்த கந்தையா(55) உள்பட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில்வே காலனிபகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளனர். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் 65 பேர் தடியடியில் காயமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story