தூத்துக்குடியில் வரும் 25-ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர்


தூத்துக்குடியில் வரும் 25-ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர்
x
தினத்தந்தி 23 May 2018 10:04 AM IST (Updated: 23 May 2018 10:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வரும் 25-ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வரும் 25-ந் தேதி வரை 144 தடையை  நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நேற்று வன்முறை ஏற்பட்ட நிலையில் இந்த 144 தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதில் வேம்பார், குளத்தூர்,ஆறுமுகமங்களம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம்,எப்போதும் வென்றான் ஊர்களிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், மிதிவண்டி, இருசக்கர வாகனம், நாங்கு சக்கர வாகனங்கள் மூலம் பேரணிகள் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கத்தி, வாள், கம்பு, அரசியல் மற்றும் சாதிக்கொடி கம்புகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



Next Story