தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்
தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உதவிகளை செய்ய தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. #SterliteProtest
புதுடெல்லி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இன்னும் பதட்டமான நிலையே நீடிக்கிறது, இன்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகி உள்ளது. அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 22 இளைஞர் உயிரிழந்து உள்ளார். 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளார்கள். தூத்துக்குடி வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் விடுத்து உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வன்முறை தொடர்பாக அறிக்கையளிக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில்
தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உதவிகளை செய்ய தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழக தலைமை செயலாளரிடம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா நிலைமை குறித்து பேசிஉள்ளார். அப்போது, தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என தெரிவித்து உள்ளார், மத்திய படைகளை அனுப்பவும் தயார் எனவும் குறிப்பிட்டு உள்ளார். மத்தியப்படைகள் தயாராக உள்ளது, தேவைப்பட்டால் அனுப்பி வைக்கப்படும் என ராஜீவ் கெளபா கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story