தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவிய சூழலில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது - தூத்துக்குடி காவல்துறை
தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவிய சூழலில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #SterliteProtest
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்விவகாரத்தில் போலீஸ் மற்றும் அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் கண்டணம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்றும் அங்கு பதட்டமான நிலையே நீடித்தது. அண்ணாநகர் 6-வது தெருவில் மோதல் வெடித்தது. ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மேலும் பதட்டத்தை அதிகரித்தது. கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில்
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தமிழக உள்துறை இணையதள சேவையை முடக்கி உள்ளது.
மீண்டும் பதற்றமான நிலவிய சூழ்நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தூத்துக்குடி காவல்துறை தெரிவித்து உள்ளது.
2 காவல்துறை வாகனங்கள் உள்பட 5 வாகனங்களுக்கு இன்று தீ வைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இன்று 67 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story