தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 May 2018 12:15 AM IST (Updated: 23 May 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை, 

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் அரசு பயங்கரவாதம். இதற்கு காரணமானவர்கள் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை உயர் அதிகாரிகள், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர்தான். இதற்கு பொறுப்பேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த கொலைக்கு காரணமாக இருந்த அத்தனை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

 கடந்த காலங்களில் ரப்பர் தோட்டாக்களும், 303 ரக துப்பாக்கிகளும் தான் துப்பாக்கி சூடுக்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால், தூத்துக்குடியில் எஸ்.எல்.ஆர். ரகத்தை சேர்ந்த தானியங்கி துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை எந்த கலவரங்களின் போதும், இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. துப்பாக்கியால் சுட்டவர்கள் சீருடையில் இல்லை. வாகனத்துக்கு மேல் ஏறி நின்று குறிபார்த்து சுட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ள ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபர் விசாரணை கமி‌ஷன் தேவையில்லை. சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story