நிர்மலாதேவிக்கு ஜூன் 6-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
பேராசிரியை நிர்மலாதேவி நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விருதுநகர்,
பேராசிரியை நிர்மலாதேவி நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவல் ஜூன் 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது காவல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து நேற்று அவர் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, ஜூன் 6-ந் தேதி வரை நிர்மலாதேவியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் மீண்டும் நிர்மலாதேவியை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story