ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்தபோது ப.சிதம்பரம் என்ன செய்தார்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
தூத்துக்குடியில் 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க முயற்சி நடந்தபோது ஆலையை திறக்கக்கூடாது என்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தியவன் நான்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க முயற்சி நடந்தபோது ஆலையை திறக்கக்கூடாது என்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தியவன் நான். அப்போது பெருவாரியான ஆதரவு கிடைக்காததால் அ.தி.மு.க., தி.மு.க. அரசுகள் அனுமதி வழங்கினார்கள். ஆனால் இன்று போராட்டம் வலுத்து உள்ளது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபற்றி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரப்பட்டது. அப்போது ப.சிதம்பரம் எங்கே போய் இருந்தார்?. உள்துறை மந்திரியாகவும், நிதித்துறை மந்திரியாகவும் முழு அதிகாரத்துடன் இருந்தபோது என்ன செய்தார்?.
அப்போதே நான் போராடினேன். வைகோ போராடினார். இப்போது போராட்டம் நடத்துபவர்கள் எல்லாருமே போலித்தனமாக நடத்துபவர்கள். அன்றே இதை தடுத்து இருந்தால் 10 பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story