3 மாவட்டங்களில் இணையதள முடக்கத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு


3 மாவட்டங்களில் இணையதள முடக்கத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு
x
தினத்தந்தி 24 May 2018 5:35 AM GMT (Updated: 24 May 2018 5:35 AM GMT)

தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில் இணையதள முடக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

சென்னை,

தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவலை தடுக்கும் வகையில் இணைய சேவையை முடக்க தமிழக உள்துறை உத்தரவிட்டு உள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில் நேற்று முதல் 27-ம் தேதி வரையில் இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இணைய சேவை முடக்கம் காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் செயல்படாது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழக அரசு இணைய சேவை முடக்கத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

இந்த இணையதள  முடக்கத்தை எதிர்த்து சென்னை  ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷம் என்பவர்  முறையீடு செய்து உள்ளார். அவர் தனது முறையீட்டில்   துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்து உள்ளார்.

சூரியபிரகாஷம் முறையீட்டை  அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணை நடத்தப்படுகிறது. 

Next Story
  • chat