என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் உதவி மையங்களை நாடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 10 சதவீத விண்ணப்பங்கள் தான் உதவி மையங்கள் மூலம் வந்துள்ளன. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 30–ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இதனிடையே மாணவர்கள் வசதிக்காக 3 வருட கட்–ஆப் மதிப்பெண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story