29-ந் தேதி தொடங்கி ஜூலை 9-ந் தேதி வரை சட்டசபை நடைபெறும் சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 29-ந் தேதி தொடங்கி ஜூலை 9-ந் தேதிவரை நடைபெறும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ப.தனபால் தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சட்டசபை கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் சபாநாயகர் ப.தனபால் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 29-ந் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெறுகிறது.
அதன்படி 29.5.18 அன்று வனத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். இறுதியில், எம்.எல்.ஏ.க்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்துவிட்டு, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
எந்தத் துறை என்றைக்கு?
30.5.18 - பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை;
31.5.18 - எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை;
1.6.18 - மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம்;
4.6.18 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை; சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை:
5.6.18 - நீதி நிர்வாகம்; சிறைச்சாலைகள்; சட்டத் துறை;
6.6.18 - சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை; மாற்றுத் திறனாளிகள் நலத்துறை;
7.6.18 - தொழில்துறை; குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை;
8.6.18 - கைத்தறி மற்றும் துணிநூல்; கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்;
11.6.18 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை; கட்டிடங்கள்; பாசனம் (பொதுப்பணித்துறை);
12.6.18 - வேளாண்மைத் துறை;
13.6.18 - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை;
14.6.18 - மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை:
25.6.18 - செய்தி மற்றும் விளம்பரம்; எழுதுபொருள் மற்றும் அச்சு; சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு:
26.6.18 - காவல்; தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்;
27.6.18 - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை; இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு:
28.6.18 - சுற்றுச்சூழல், வணிக வரிகள்; முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு;
29.6.18 - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை; பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை;
3.7.18 - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம்; போக்குவரத்துத் துறை;
4.7.18 - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை;
5.7.18 - தமிழ் வளர்ச்சி; இந்து சமய அறநிலையத்துறை; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை;
6.7.18 - கூட்டுறவு; உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு:
9.7.18 - பொதுத்துறை; சட்டசபை; கவர்னர் மற்றும் அமைச்சரவை; நிதித் துறை; திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை; ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகளும்; பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை; அரசு சட்ட முன்வடிவுகளை ஆய்வு செய்து நிறைவேற்றுதல்.
மொத்தத்தில் சட்டசபை கூட்டத்தொடர் விடுமுறை நாட்கள் போக 23 நாட்கள் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story