“துப்பாக்கி குண்டை நெஞ்சில் வாங்கும் வீரம் எனக்கு உண்டு” போலீசாருக்கு டி.வி நடிகை நிலானி சவால்


“துப்பாக்கி குண்டை நெஞ்சில் வாங்கும் வீரம் எனக்கு உண்டு” போலீசாருக்கு டி.வி நடிகை நிலானி சவால்
x
தினத்தந்தி 25 May 2018 3:30 AM IST (Updated: 25 May 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை கலவரம் பற்றி எரியும்போது அதை மேலும் தூண்டுவதுபோல் பேசியதாக டி.வி நடிகை நிலானியை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை கலவரம் பற்றி எரியும்போது அதை மேலும் தூண்டுவதுபோல் பேசியதாக டி.வி நடிகை நிலானியை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் சீருடை அணிந்து அவர் பேசி வெளியிட்ட வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை கொன்றுள்ளனர். வெட்கப்படுகிறேன். தமிழர்களை தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர். இலங்கையைப்போல் தமிழகத்திலும் தமிழர்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். மக்களை நெஞ்சில் சுட்டுக்கொல்ல யார் அதிகாரம் கொடுத்தார்கள். மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அரசு வேலைகளை புறக்கணியுங்கள்” என்றெல்லாம் வீடியோவில் அவர் ஆவேசமாக பேசி இருந்தார்.

போலீசார் கைது செய்ய தேடுவதை தொடர்ந்து நிலானி நேற்று இன்னொரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

“என்னையும் சுட்டு கொல்லுங்க...என்னை நோட் பண்ணுங்க. வாட்ச் பண்ணுங்க. கைது பண்ணுங்க. அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையே கிடையாது.

என்னை தூக்கில் கூட போடுங்க. ஒரு காலத்தில் கொடிய குற்றத்துக்காகத்தான் தூக்கு தண்டனை கொடுத்தாங்க. இன்னைக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நீங்க நல்லாவே புரூப் பண்ணிட்டீங்க. சோ என்னையும் சுடுங்க, கைது பண்ணுங்க... என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க...

நான் செத்தாலும் சரி என்னை மாதிரி ஆயிரம் பேர் இருக்காங்க. நீங்க சுடணும்னு முடிவு பண்ணிட்டீங்கனா, உங்ககிட்ட அதுக்கான துப்பாக்கியும், ரவையும் இருக்காணு மட்டும் செக் பண்ணிக்கோங்க. முடிஞ்சா சுட்டுக்கோ...

நெஞ்ச நிமிர்த்தி காட்டி முன்னாடி நின்னு குண்டை நெஞ்சில் வாங்கி சாகிற வீரம் எங்ககிட்ட இருக்கு. நீங்க யூனிபார்ம கழட்டிகிட்டு மப்டியில வந்து எங்களை சுடனும்னு அவசியமே இல்லை. யாரை சுடனும்னு நேம்லிஸ்ட் கொடு, வந்து நெஞ்சை காட்டிக்கிறோம். முடிஞ்சா அப்போ சுட்டுக்கோ புரியுதா...

நான் செத்தா நாளைக்கு என் குழந்தை வருவான். ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழ் போராளி செத்தால் அவனோட குழந்தையோ, பேரனோ வந்தே தீருவான். இது தமிழனோட உணர்வு. இதை நீங்க மாற்ற முடியாது. தமிழன் இல்லாம இந்த பூமியே கிடையாது.

நாங்க காந்தியவாதிகள். அறவழியில் போராடி வந்துட்டு இருக்கோம். எங்களை நீங்க தீவிரவாதிகளாக காமிச்சுகிட்டு இருக்கீங்க. நாங்க தீவிரவாதி கிடையாது. எங்க கையில் துப்பாக்கியோ, கட்டையோ இல்ல. எங்களை நீங்க காமிக்க முடியுமோ காமியுங்க. அதைப்பத்தி எங்களுக்கு கவலை கிடையாது.

இப்போ என்ன... நான் போலீஸ் யூனிபார்மை மிஸ் யூஸ் பண்ணினதா என்னை கைது பண்ணனுமா., பண்ணுங்க. என் அண்ணன், தம்பிகளும் போராடுவாங்க. அவங்களும் கேள்வி கேட்பாங்க. சோ முடிஞ்சா இப்பவே எல்லாத்தையும் மொத்தமா கொன்னுடுங்க. எங்க பரம்பரையில ஒரு குழந்தைய கூட விடாதீங்க. ஒட்டுமொத்தமா தமிழர்கள அழிச்சுடுங்க. தமிழன் ஒருத்தன் உயிரோடு இருந்தாலும் அவன் முளைச்சு வந்து உங்களை கேள்வி கேட்பான்.

இவ்வாறு வீடியோவில் நிலானி பேசியுள்ளார்.

இந்த புதிய வீடியோவும் நேற்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

Next Story