மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 2.05 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் 2.50 மணி, வேளச்சேரி-ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.55 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 1.35 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரெயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 2.05 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் மதியம் 2.50 மணி, கடற்கரை-ஆவடி காலை 11.10 மணி, கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05 மணி, கடாற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 1.35 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது
திருவள்ளூர்-வேளச்சேரி மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 7.30, 8.35 மணி ரெயில்கள் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையேயும் இன்று பகுதியாகவும், திருவள்ளூர்-கடற்கரை மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 10, 11.15 மணி ரெயில்கள் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும் நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10 மணி ரெயில்கள் இன்றும், கடம்பத்தூர்-கடற்கரை மதியம் 12.05 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 12.10 மணி ரெயில்கள் நாளையும் மூர்மார்க்கெட்டுக்கு திருப்பிவிடப்படும்.
வேளச்சேரி-திருத்தணி இன்று காலை 11.20 மணி ரெயில் மதியம் 12.15 மணிக்கும், வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 2.30 மணி ரெயில் மதியம் 2.30 மணிக்கும், வேளச்சேரி-சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி ரெயில் மதியம் 2.45 மணிக்கும் வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.
கடற்கரை-திருத்தணி நாளை மதியம் 12.10 மணி ரெயில் மதியம் 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி ரெயில் மதியம் 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்பேட்டை மதியம் 2.40 மணி ரெயில் மதியம் 2.45 மணிக்கும் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.
ஆவடி- பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில்கள் 2 நாட்களுக்கும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story