சென்னையில் முதல்–அமைச்சர் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சென்னை,
தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகம், அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது இல்லங்களில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story