4 ஆண்டு சாதனையை சொல்ல ஓராண்டு போதாது - தமிழிசை பேட்டி


4 ஆண்டு சாதனையை சொல்ல ஓராண்டு போதாது - தமிழிசை பேட்டி
x
தினத்தந்தி 26 May 2018 11:26 AM IST (Updated: 26 May 2018 11:26 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நிகழ்த்திய சாதனைகளை சொல்ல எஞ்சியுள்ள ஓராண்டு போதாது என்று பாஜக மாநில தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம். #BJP #TamilisaiSoundararajan

சென்னை, 

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனால்  இந்த ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து தமிழக பாஜக  தலைவா்  தமிழிசை சௌந்தரராஜன் இதுக்குறித்து கூறுகையில்,

“இந்த ஆண்டும் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை பாஜக அரசு இன்னும் கொண்டு வர உள்ளது ”, என்றாா்.  மேலும், பாஜக ஆட்சி பற்றி எதிர்மறையான தகவல்கள் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன என்பதனையும் விளக்கினாா். கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நிகழ்த்திய சாதனைகளை இந்த ஓராண்டில்
சொல்ல முடியாது என்றாா்.

இந்நிலையில்,  மீண்டும் மத்தியில் பாஜக தலைமையில்  ஆட்சி அமையும் . இவ்வாறு அவா் கூறினாா்.

Next Story