சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 7 பேர் பலி


சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 7 பேர் பலி
x
தினத்தந்தி 1 Sep 2018 1:00 AM GMT (Updated: 2018-09-01T06:31:52+05:30)

சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

சேலம், 

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாங்கம் என்ற பகுதியில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்ற தனியார் சொகுசு  பேருந்தும், பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்ற தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  

பெங்களூருக்கு மலர் ஏற்றிச்சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையோரம் நின்றுள்ளது. சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பேருந்தின் ஓட்டுநர் லாரி நின்றதை கவனிக்கவில்லை. கடைசி நேரத்தில் லாரியை கண்ட ஓட்டுநர் அதன் மீது மோதமால் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். 

இதில் ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்த பேருந்து எதிரே வந்த பேருந்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில்  சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 30-க்கு மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வந்த சேலம் கலெக்டர் ரோகிணி, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். Next Story