மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்


மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்
x
தினத்தந்தி 2 Sept 2018 10:44 AM IST (Updated: 2 Sept 2018 10:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு நேற்று முன்தினம் இரவு ‘திடீர்’ உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் அவர் உடல்நலம் சீரடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நிலை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து, அவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வார்டுக்கு மாற்றப்பட்டார். விஜயகாந்த் வேகமாக குணமடைந்து வருவதாகவும், ஆஸ்பத்திரியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் ‘மியாட்’ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.

Next Story