அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் திரளுவார்களா? அழகிரி பதில்


அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் திரளுவார்களா? அழகிரி பதில்
x
தினத்தந்தி 2 Sept 2018 1:08 PM IST (Updated: 2 Sept 2018 1:08 PM IST)
t-max-icont-min-icon

அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் திரளுவார்களா என்ற கேள்விக்கு அழகிரி பதில் அளித்தார். #MKAlagiri


சென்னை,

மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, தி.மு.க.வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க.வில் எங்களை இணைக்க தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள நாங்களும் தயார் என கூறியிருந்தார்.

இந்தநிலையில்,  வரும் 5-ம் தேதி மாபெரும் பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். இது குறித்து செய்தியார்கள் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் திரளுவார்களா என்ற கேள்விக்கு  நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன் என பதில் அளித்தார்.

ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனக் கூறியும் அழைப்பு வரவில்லையே என்ற கேள்விக்கு, கருத்து கூற விரும்பவில்லை என அழகிரி பதில் அளித்தார்.

Next Story