ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும், தனித்தனியாக தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும், தனித்தனியாக தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 2 Sept 2018 5:48 PM IST (Updated: 2 Sept 2018 5:48 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும், தனித்தனியாக தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் ராஜேந்திர கூறியுள்ளார்.

சென்னை,

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தடுக்க தமிழக அரசு சட்டரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசு எங்களை நம்பினால் நாங்கள் அவர்களை நம்புவோம், நம்பவில்லையெனில் நாங்களும் நம்பமாட்டோம். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் ஆட்சிக்கு வர விரும்புவதால், ஆட்சியில் உள்ளவர்களை விமர்சனம் செய்கிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும், தனித்தனியாக தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story