மாநில செய்திகள்

அமைச்சர் கடம்பூர் ராஜூ மகன் திருமண வரவேற்பு கவர்னர், முதல்-அமைச்சர் நேரில் வாழ்த்து + "||" + Minister Kadambur Raju Son wedding reception Congratulates the Governor, First Minister

அமைச்சர் கடம்பூர் ராஜூ மகன் திருமண வரவேற்பு கவர்னர், முதல்-அமைச்சர் நேரில் வாழ்த்து

அமைச்சர் கடம்பூர் ராஜூ மகன் திருமண வரவேற்பு கவர்னர், முதல்-அமைச்சர் நேரில் வாழ்த்து
அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
சென்னை,

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கடம்பூர் ராஜூ- இந்திராகாந்தி ஆகியோரின் மகன் கே.அருண்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த ஜி.தினகரன்-டி.சாந்தி தம்பதியரின் மகள் டி.திவ்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அண்ணாநகர் சி.கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கில் நேற்று மாலை நடந்தது.


நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

சபாநாயகர் தனபால், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், காமராஜ், சி.வி.சண்முகம், துரைக் கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மைத்ரேயன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன், ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி, புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிர மணியன் ஆதித்தன், தினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், தமிழக அரசின் செய்தித்துறை இயக்குனர் சங்கர், கூடுதல் இயக்குனர் எழிலழகன், செயலாளர் வெங்கடேசன், நடிகர்கள் பிரபு, ராம்கி, விவேக், நடிகைகள் குட்டி பத்மினி, நிரோஷா, திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் ஆகியோரும் வாழ்த்தினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்
முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என திருவாரூரில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
2. மற்ற மாநிலங்களை விட தமிழகம், கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலம் கவர்னர் பேச்சு
மற்ற மாநிலங்களை விட தமிழகம், கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலம் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
3. கரூருக்கு இன்று கவர்னர் வருகை பொதுமக்களிடமிருந்து மனுபெறுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
கரூருக்கு இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுபெறுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
4. கரூருக்கு 7-ந் தேதி தமிழக கவர்னர் வருகை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்
கரூருக்கு வருகிற 7-ந் தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
5. காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் காங்கிரஸ் பிரமுகர் கொலையை தடுத்திருக்கலாம் போலீசாருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டிப்பு
காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் காங்கிரஸ் பிரமுகர் கொலையை தடுத்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டிப்புடன் கூறினார்.