மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே - சென்னை ஐகோர்ட்
மெரினா கடற்கரையில் எந்த விதப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது என தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளித்து இருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது - தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது
வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வு, மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதி முடியாது என உத்தரவிட்டது.மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story