தினகரனின் நடவடிக்கைகளால் அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் அமைச்சர் தங்கமணி
தினகரனின் நடவடிக்கைகளால் அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னை,
வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
பாஜகவின் பினாமி ஆட்சி என டிடிவி தினகரன் கூறுகிறார், கட்சியின் கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு கொடுத்து வருகிறோம். ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு இருந்தது என்றால் ரூ.20 நோட்டை டிடிவி தினகரன் கொடுத்தது ஏன்? தினகரனின் நடவடிக்கைகளால் அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.
பாஜகவின் பினாமி ஆட்சி என டிடிவி தினகரன் கூறுகிறார், கட்சியின் கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு கொடுத்து வருகிறோம் .
தன்னை பாஜகவில் சேர்த்து விடுமாறு பல சாமியார்களிடம் கேட்டுள்ளார் டிடிவி தினகரன்.18 பேருக்கும் அமைச்சர் பதவி தருவதாக கூறி தினகரன் ஏமாற்றி வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு வெளி நாட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தும், வேண்டாம் என்று சசிகலா தரப்பு தெரிவித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story