உங்களுக்காகவே வாழ்ந்த நான் துரோகியா? துணை முதல்-அமைச்சரின் முன்னாள் உதவியாளர்? டுவிட்டர் பதிவால் பரபரப்பு
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் முன்னாள் உதவியாளர் ரமேசின் பெயரில் வெளியான டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர் செல்வத்தின் உறவினர் ரமேஷ் , அவருடைய உதவியாளராகவும் பணிபுரிந்தார். சமீபகாலமாக ரமேஷை பன்னீர்செல்வம் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், ஓபிஎஸ் ரமேஷ் என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு இந்த மாதம் துவக்கப்பட்டு உள்ளது. அதில், துணை முதலமைச்சரின் முன்னாள் உதவியாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்று காலை அதில், என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே வாழ்ந்த நான் துரோகியா? என் நினைவு தெரிந்ததிலிருந்து உங்களுக்காக மட்டுமே உழைத்தேன்.. என்னை ஒதுக்கிவிட்டீர்கள், கலங்கவில்லை, என்னை துரோகி என்று சொல்லாதீர்கள் மாமா, மனது வலிக்கிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ரமேஷிடம் கேட்டபோது, அது எனது கணக்கு இல்லை; நான் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்தார். அப்படியானால், துணை முதலமைச்சரின் உதவியாளர் பெயரைப் பயன்படுத்தி, இத்தகைய செயலைச் செய்திருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Related Tags :
Next Story