காமராஜர் நினைவு நாளை சாக்லெட் கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்


காமராஜர் நினைவு நாளை சாக்லெட் கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ்  தொண்டர்கள்
x
தினத்தந்தி 2 Oct 2018 3:50 PM IST (Updated: 2 Oct 2018 3:50 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் தொண்டர்கள் சாக்லேட் வழங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.


காமராஜரின் 44-வது நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சாக்லெட் பாக்கெட்டுகளை பிரித்து தட்டில் அவற்றை கொட்டி அனைவருக்கும் வினியோகிக்க வந்தனர்.

இதைக் கண்ட நிர்வாகி ஒருவர், நினைவு நாளில் சாக்லெட் வழங்குவதா எனக் கண்டிக்கவே, அந்த தொண்டர்கள் வேகமாக சாக்லெட்டுகளை ஒரு பையில் கொட்டி விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டனர்.

Next Story