”108 ஆம்புலன்ஸ்” ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை ஐகோர்ட் தடை


”108 ஆம்புலன்ஸ்” ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை ஐகோர்ட் தடை
x
தினத்தந்தி 1 Nov 2018 12:59 PM IST (Updated: 1 Nov 2018 12:59 PM IST)
t-max-icont-min-icon

"108 ஆம்புலன்ஸ்" ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

சென்னை,

30 சதவீத போனஸ் வழங்கக்கோரி தீபாவளி தினத்தன்று போரட்டம் நடத்த உள்ளதாக "108 ஆம்புலன்ஸ்" ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.  5 ஆம் தேதி இரவு முதல் 6 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 8 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 


Next Story