சிலைக் கடத்தல்: 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் கொடுக்கவில்லை - பொன்.மாணிக்கவேல்


சிலைக் கடத்தல்:  50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர்  கொடுக்கவில்லை - பொன்.மாணிக்கவேல்
x
தினத்தந்தி 1 Nov 2018 3:04 PM IST (Updated: 1 Nov 2018 3:04 PM IST)
t-max-icont-min-icon

சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் இன்னும் கொடுக்கவில்லை ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் கூறி உள்ளார்.


சென்னை

சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் இன்னும் கொடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில்  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார் அளித்தார். சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட  மனுக்கள் மீதான விசாரணையின் போது அவர் இந்தப் புகாரை தெரிவித்தார். 

சிலை திருட்டு தொடர்பாக மத்திய அரசுக்கு ஆவணங்கள் அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. 

இதையடுத்து, 50 முதல் தகவல் அறிக்கைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மத்திய அரசு முடிவுக்கு காத்திருக்காமல் இந்த மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கூறி உள்ளது.

இதனிடையே சிலைக்கடத்தல் வழக்கில், தொழில் அதிபர்கள் ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோர் முன் ஜாமீன் மனு விசாரணையின் போது, இருவரும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிலைகள் மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மயிலாப்பூர் கோயில் சிலைகளுக்கான ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அறநிலையத்துறை கடும் விளைவை சந்திக்க நேரிடும் என ஐகோர்ட் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

Next Story