சென்னையில் பரவலாக மழை
சென்னை அதன் சுற்றுப்புறங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது. நேற்று நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது.
இந்தநிலையில் சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை,கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, தரமணி, அண்ணாநகர், அடையாறு , கொடுங்கையூர், அயனாவரம், பெரம்பூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story