பல்லுயிர் மேலாண்மை குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பல்லுயிர் மேலாண்மை குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பல்லுயிர் மேலாண்மைக்குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான இந்த இரு அமைப்புகளையும் அமைக்கும் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தான் ஐகோர்ட்டு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன் நிபந்தனைகளில் முக்கியமானது சாலைத் திட்டங்களால் பல்லுயிர் வாழிடங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? என்பது தான்.
ஆனால், தமிழகத்தில் பல்லுயிர் வாழிடங்களை நிர்வகிப்பதற்கான பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களோ, பல்லுயிர் பதிவேடுகளோ உருவாக்கப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் சார்பில் நீதிபதிகளிடம் எடுத்துக்கூறப் பட்டது. அதை ஏற்றுத் தான் தமிழகத்தில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்படாதது ஏன்? என்று கேட்ட நீதிபதிகள், மரங்கள் சட்டம் உடனடியாக நிறைவேற்றப்படுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி.
சென்னை ஐகோர்ட்டு ஆணைப்படி பல்லுயிர் மேலாண்மை குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story