கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் எனக்கு தீபாவளி -துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, வெள்ளிக்கிழமையான இன்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன். மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய உள்ளேன்.நாளை முதல் சென்னையில் முகாமிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்.
எனவே எனக்கு தீபாவளி என்பது கோயம்பேடு பஸ் நிலையத்தில்தான். தொழிலாளர்கள் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
Related Tags :
Next Story