முதலமைச்சர் அனுப்பும் கடிதம் தொடர்பாக உடனடியாக நிதி அளிக்கப்பட்டு வருகிறது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
முதலமைச்சர் அனுப்பும் கடிதம் தொடர்பாக உடனடியாக நிதி அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை,
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியார்களிடம் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் அனுப்பும் கடிதம் தொடர்பாக உடனடியாக நிதி அளிக்கப்பட்டு வருகிறது. நிதி தொடர்பாக தம்பிதுரை கூறிய கருத்து பற்றி எனக்கு தெரியாது.
ராகுல் காந்தி குழப்பத்தில் உள்ளார், ரஃபேல் விமானம் குறித்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கணக்கை கூறி வருகிறார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளில் 25% பொருட்களை அரசே கொள்முதல் செய்துகொள்ளும். ஏற்றுமதியில் 25 சதவிகிதம் எம்எஸ்எம்யின் பங்கு உள்ளது என்றும், 20 மில்லியன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story