ஆட்சியாளர்களுக்கு தேவையான போது மக்களுக்கு முகவரி தருவார்கள், தேவையில்லாதபோது முகவரியே இல்லாமல் செய்துவிடுவார்கள் - கமல் பேச்சு
ஆட்சியாளர்களுக்கு தேவையான போது மக்களுக்கு முகவரி தருவார்கள், தேவையில்லாதபோது முகவரியே இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியில் புகார்கள் வந்தன.
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், திடீரென பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு தனது காரில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் காரில் நின்றபடியே அவர், அந்த பகுதி மக்களிடம், குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:–
ஆட்சியாளர்களுக்கு தேவையான போது மக்களுக்கு முகவரி தருவார்கள், தேவையில்லாதபோது முகவரியே இல்லாமல் செய்துவிடுவார்கள். ஓட்டு வேண்டும் என்றால் தேடி வருவார்கள். நான் அதற்காக வரவில்லை. உங்கள் பிரச்சினைகளை தீர்ப்போம். மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உரிய அதிகாரிகளிடம் பேசிவிட்டு ஒரு வாரத்தில் உங்களை வந்து சந்திப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story