ஊதிய உயர்வு ஒப்பந்த ஆணை வெளியிட வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 13-ந் தேதி வேலை நிறுத்தம்
ஊதிய உயர்வு ஒப்பந்த ஆணை வெளியிட வலியுறுத்தி நேற்று கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த ஆணையை வெளியிடக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வைரப்பன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சர்வேசன், தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் இ.அருணாசலம் தொடங்கி வைத்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநிலத் தலைவர் ஏ.சவுந்திரராஜன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உண்ணாவிரதத்தின் போது, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கூட்டுறவு வங்கி ஊழியர்களும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போகின்றனர். இந்த போராட்டம் அதோடு நின்றுவிட போவது இல்லை. தமிழகத்தில் உள்ள வணிக வங்கி ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்றார்.

Related Tags :
Next Story