ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்: முதல் அமைச்சர் பழனிசாமி


ஜாக்டோ - ஜியோ  அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்: முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 Dec 2018 7:36 AM GMT (Updated: 1 Dec 2018 7:36 AM GMT)

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்குப் பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ  அமைப்பினர் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலை நிறுத்தம் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெறும் நிவாரணப்பணிகளை பாதிக்கும். ஜாக்டோ -ஜியோவின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


Next Story