புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70% மின்சாரம் விநியோகம் - அமைச்சர் தங்கமணி
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70% மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் தங்கமணி செய்தியார்களிடம் கூறியதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளில் காய்க்கும் உயர் ரக தென்னை மரக்கன்றுகள் தர நடவடிக்கை எடுக்கப்படும்,
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70% மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
புயல் பாதித்த திருவாரூர் மாவட்டத்தில் 2,676 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்றனர். 152 கால்நடை மருத்துவ முகாம்கள் மூலம் 25,504 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்டு போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story