கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர் - அமைச்சர் செல்லூர் ராஜூ


கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 2 Dec 2018 2:18 PM GMT (Updated: 2 Dec 2018 2:18 PM GMT)

கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியார்களிடம் கூறியதாவது:

கஜா புயல் நிவாரண பணிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் களப்பணியாற்றினர், அதைப்போலவே நிவாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ளது இடைக்கால நிவாரணமே, மத்திய குழுவின் அறிக்கை சென்றடைந்த பின்புதான் முழுத்தொகையும் நமக்கு கிடைக்கும்.

திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் கவலையில்லை : நாங்கள் மக்களை நம்பித்தான் அரசியலில் இருக்கிறோம். ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டிச.5-ம் தேதி மதுரையில் அமைதி பேரணி நடைபெறும். 

திமுகவுடன் எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story